விளையாட்டு

ஆசிய வில் வித்தை சாம்பியன்ஷிப்

  • ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் பட்டங்களை வென்ற முதல் இந்திய ஆண் மற்றும் பெண் ரிகர்வ் ஆர்ச் வீரர்களாக பாரிஸ் ஒலிம்பிக் வீரர்கள் பி. திராஜ் மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் உருவெடுத்தனர்.
  • இப்போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. 
  • இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சிட்னி ஸ்குவாஷ் போட்டி

  • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. 
  • இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராதிகா சீலன் நியூஸிலாந்தின் மெய்டன்-லீகோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 
  • 24-வயதான தமிழகத்தைச் சேர்ந்த ராதிகா வெல்லும் 2வது பிஎஸ்ஏ பட்டம் இதுவாகும்.

துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்

  • எகிப்தில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஈஷா சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஈஷா சிங் உலக சாம்பியன்ஷிப் பில் தனது முதல் தனிநபர் பிரிவு பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார். களத்திலிருந்த மற்றொரு இந்தியரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்றவருமான மனு பாக்கர் 5-ஆம் இடம் பெற்றுள்ளார்

தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டி

  • நவம்பர் மாதம் 10 முதல் 12-ம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டி நடைபெற்றது.
  • தீவிரவாத தாக்குதலின்போது பொது மக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து நடத்தப்பட்ட தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல்துறை முதலிடம் பிடித்தது.
  • தமிழக காவல் துறையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புக் குழுவாக செயல்படுகிறது. 
  • 2025-க்கான அதாவது, ரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் தீவிரவாத தாக்குதல் ஆபத்துகளின்போது, விரைந்து செயல்பட்டு பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை எவ்வாறு தூய்மைப் படுத்துவது என்பதை நோக்கமாக வைத்து போட்டி நடத்தப்பட்டது.

 

Next Current Affairs விளையாட்டு >