கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான 2025 UNESCO ஆசிய-பசிபிக் விருதுகள்
- சூழல்: மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் உள்ள 475 ஆண்டுகள் பழமையான ‘அவர் லேடி ஆஃப் கிரேஸ் கதீட்ரல்’ (Our Lady of Grace Cathedral), 2025-ஆம் ஆண்டிற்கான UNESCO ஆசிய-பசிபிக் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பு விருதுகளில் ‘மெரிட் விருது’ (Award of Merit) பெற்றுள்ளது.
- பாப்பாடி கிராமத்தில் உள்ள இந்த 16-ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய தேவாலயம், உள்ளூர் மக்களின் நிதியுதவியுடன் சிமெண்ட் பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் சீரமைக்கப்பட்டதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது
- ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக UNESCOவா ல் இவ்விருது 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

