தந்தை பெரியார் விருது
- சூழல்: 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் “தந்தை பெரியார் சமூக நீதி விருதுக்கு” உரிய விருது பெறுபவரைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தந்தை பெரியார் விருது பற்றி:
- சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை அங்கீகரிக்கும் வகையில், “தந்தை பெரியார் சமூக நீதி விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- தந்தை பெரியார் சமூக நீதி விருதைப் பெறுபவருக்கு ₹5,00,000/- (ஐந்து இலட்சம் ரூபாய் மட்டும்) பரிசுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் மற்றும் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
- விருது பெறுபவர் முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- தந்தை பெரியார் சமூக நீதி விருதைப் பெற்ற சமீபத்தியவர்கள்:
o 2021: கி. திருநாவுக்கரசு.
o 2022: கவிஞர் காளி பூங்குன்றன்.
o 2023: சுப. வீரபாண்டியன்.
o 2024: விடுதலை இராஜேந்திரன்.
சிறந்த மாநில விருது விளையாட்டை மேம்படுத்துவதற்கான விருது
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புது டெல்லியில் நடைபெற்ற இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வணிக விருதுகள் விழாவில், ‘விளையாட்டு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநிலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த விழாவில், இந்தியாவின் விளையாட்டுத் துறை முழுவதும் சிறந்து விளங்குதல், புதுமை மற்றும் தலைமைப் பண்பு ஆகியவை அங்கீகரிக்கப்பட்டன

