‘காந்தியடிகள் காவலர்’ விருது
- ஐந்து-போலீஸாருக்கு’காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிக்கப்பட்டது
- மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதாளர்கள்
- விழுப்புரம் மாவட்டம் – ப.நடராஜன்,
- விழுப்புரம் மாவட்டம் – மா.சத்யாநந்தன்,
- கள்ளக்குறிச்சி மாவட்டம் – சு.மணிகண்டன்,
- கடலூர் மாவட்டம் – க.நடராஜன்
- சேலம் மாவட்டம் – வா.பெ.கண்ணன் ஆகியோர் விருதுபெற்றவர்கள் ஆவர்.
- இவ்விருது, முதல்வரால் 2026-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
- இவ்விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஆசிய சாதனை விருது
- டாக்டர் மயில்வாகனன் நடராஜனுக்கு ஆசிய சாதனை விருது வழங்கப்பட்டது
- ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை விருதை வழங்குகிறது.
- ஆசிய அளவில்அதிகபட்ச எண்ணிக்கையில் பிரத்யேக எலும்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமிடமிருந்து தேசிய விருது, பி.சி.ராய் விருது, பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

