வரலாறு

முக்கியமான நாட்கள்

சர்வதேச உலக பழங்குடியின மக்கள் தினம் – ஆகஸ்ட் 9

  • 2023 கருப்பொருள் – “சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடி இளைஞர்கள்”.

சமீபத்திய புதிய சொற்கள்

ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking)

  • பொது USB சார்ஜிங் போர்ட்டை சேதப்படுத்தி, தரவுகளைத் திருடுதல் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் தீம்பொருளை (malware) நிறுவி சாதனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற சைபர்-தாக்குதல்கள்.

டீப்ஃபேக் (Deep-fake) தொழில்நுட்பம்

  • கைப்பேசியில் ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் மோசடி நடைபெறுவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி தமிழக காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு(AI) வளா்ச்சியின் ஒரு பகுதியாக ‘டீப்ஃபேக்’ (Deep Fake) தொழில்நுட்பம் உள்ளது. 
  • இந்த தொழில்நுட்பத்தில் ஒருவர் பேசும் உண்மையான ஆடியோ, விடியோ, புகைப்படங்கள் போன்று மற்றொரு நபர் மூலம் போலியான ஆடியோ, விடியோ, புகைப்படங்களை உருவாக்க முடியும். 
  • அதாவது ஒருவரது உருவத்தையும், குரலையும் பயன்படுத்தி மற்றொருவர் நடித்து அவரை போன்ற விடியோவையோ, ஆடியோவையோ உருவாக்க முடியும்.
Next வரலாறு >