பொருளாதாரம்

அறிக்கைகள்

2022 இல் 7.5 மில்லியன் புதிய காசநோய் பாதிப்புகள்: WHO உலகளாவிய அறிக்கை

  • உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் WHO உலகளாவிய காசநோய் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்
  • 2022 இல் 7.5 மில்லியன் மக்கள் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக 2020 மற்றும் 2021 இல் புதிதாக காசநோய்  கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை  கிட்டத்தட்ட 60% குறைத்துள்ளன.
  • காசநோயால் 2022 இல் 1.30 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டுள்ள மதிப்பிடப்பட்டுள்ளது

உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023

  • சமீபத்தில் உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023 ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் (SEI), காலநிலை பகுப்பாய்வு நிறுவனம், E3G, நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IISD) மற்றும் UN சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவற்றால்  கூட்டாக வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கை பல நாடுகள்  2030 ஆம் ஆண்டுக்குள்  இரண்டு மடங்கு புதைபடிவ எரிபொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும்  இது வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துகிறது.
    உற்பத்தி இடைவெளி அறிக்கை 2023 பற்றி
  • தொடக்கம் – 2019
  • வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த இது பல்வேறு நாடுகளின் திட்டமிடப்பட்ட புதைபடிவ எரிபொருள் உற்பத்தி அளவுகள் மற்றும் உலகளாவிய உற்பத்தி அளவுகளுக்கு இடையே உள்ள முரண்பாட்டை கணக்கிடுகிறது.
Next பொருளாதாரம் >