பொருளாதாரம்

குறியீடுகள் 

கையால் துப்புரவு பணி மேற்கொள்தல் – அறிக்கை

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமீபத்திய ஆண்டுகளில், ‘சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்தல்’ மரணங்களை கட்டுபடுத்தியது.
  • நாட்டில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 508 மாவட்டங்களில் (66%) மட்டுமே கையால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படுவது இல்லை என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
  • அடையாளம் காணப்பட்ட 58,000 பாதாள சாக்கடைத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.40,000 ரூபாய் ஒருமுறை இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக அவர்களில் சுமார் 22,000 பேர் (பாதிக்கும் குறைவானவர்கள்) திறன் பயிற்சி திட்டங்களுடன் இணைக்கப் பட்டுள்ளனர்.
  • கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுத் திட்டமானது, கழிவகற்றும் பணியை 100% இயந்திரமயமாக்கும் நமஸ்தே எனும் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நமஸ்தே பற்றி

  • இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) என்பது துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இந்தத் திட்டம் 2022 – இல் தொடங்கப்பட்டது மற்றும் பாதுகாப்பற்ற கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நடைமுறைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதல் நிலைத்தன்மை பற்றிய அறிக்கை 

  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) 2021-22 நிதியாண்டுக்கான நிலைத் தன்மைப் பற்றிய முதல் அறிக்கையானது, NHAI அமைப்பின் நிர்வாக அமைப்பு, பங்குதாரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் பல சமூகப் பொறுப்பு முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • குறைந்த எரிபொருள் நுகர்வு மூலம் 2019-20 நிதியாண்டில் இருந்து 2021-22 ஆம் ஆண்டு வரை நேரடி உமிழ்வு முறையே 18.44 சதவிகிதமும் 9.49 சதவிகிதமும் குறைக்கப் பட்டது.
  • ஆற்றல் நுகர்வு, செயல்பாடுகள், போக்குவரத்து மற்றும் பயணம் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வின் அளவு 2020-21 நிதி ஆண்டில் 9.7% மற்றும் 2021-22 நிதியாண்டில் 2% என்ற அளவில் குறைந்துள்ளது.  
Next பொருளாதாரம் >