சமூகப் புவியியல்
கோன்யாக் பழங்குடியினர்கள்
- பின்னணி : கோன்யாக் பழங்குடியினரால் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய மூலிகை மருந்து புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலைக் கொண்டிருப்பதை நாகாலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது பழங்குடியினரின் மருத்துவ அறிவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்துகிறது.
கோன்யாக் பழங்குடியினர்கள் பற்றி
-
- கோன்யாக் பழங்குடியினர் நாகாலாந்தின் மோன் மாவட்டத்திலும், அருணாச்சல பிரதேசத்தின் திராப் மற்றும் சாங்லாங் மாவட்டங்களிலும் காணப்படுகின்றனர்.
- கோன்யாக் சமூகம் தந்தைவழி முறைமை கொண்டது. வழக்கமாக, தந்தையின் சொத்துக்கள் மூத்த மகனுக்கே சேரும்.
- ஆலிங்மோன்யு, ஆனிமோ மற்றும் லாவுன்-ஓங்மோ ஆகியவை இவர்களது மிக முக்கியமான திருவிழாக்களாகும்.
- இவர்களது மிக முக்கியமான அறுவடைத் திருவிழா ‘ஆலெயாங் மோன்யு’ ஆகும். இது ஏப்ரல் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.

