பாதுகாப்பு

ஐஎன்எஸ் மால்வன் 

    • பின்னணி : கொச்சின் கப்பல் கட்டும் தளம் (CSL) தயாரித்த எட்டு ஆழம் குறைந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் இரண்டாவது கப்பல், ஐஎன்எஸ் மால்வன், இது  இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது.
    • இந்த கப்பல் எதிரி நாட்டின்  நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து டார்பிடோ மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் அழிக்கும் திறன் கொண்டது.
  • கப்பல் நீளம் 30–80 மீட்டர், எடை 1100 டன், மற்றும் வாட்டர்ஜெட் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.
  • இதில் டார்பிடோ குண்டுகள், ராக்கெட் குண்டுகள், சென்சார், ரேடார், சோணர் போன்ற நவீன உபகரணங்கள் உள்ளன.
  • கப்பலில் 80%க்கும் மேல் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இது ஆழம் குறைந்த கடலோர பகுதிகளில் பயணிக்கக் கூடியது மற்றும் இந்திய கடற்படையின் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

நடப்பு தகவல்கள்

யுவ விக்யானி காரியக்ரம் (YUVIKA) திட்டம் 

  • இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதே ‘யுவிகா’ (YUVIKA) திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் (ISRO) நடத்தப்படுகிறது.
  • இந்தியாவில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி திட்டம் – 2024’ (YUVIKA) -க்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் மாநிலப் பாடத்திட்டங்களை உள்ளடக்கி, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் தலா 3 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • தேர்வு அளவுகோல்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

 

Next பாதுகாப்பு >