கூட்டுப் பயிற்சி – LAMITIYE 2026
-
- சூழல்: LAMITIYE என்பது இந்தியா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும். இதன் 11-வது பதிப்பு (2026), மார்ச் 9 முதல் 20 வரை சீஷெல்ஸ் பாதுகாப்பு அகாடமியில் நடைபெறுகிறது.
- இந்திய ஆயுதப்படைகளுக்கும் சீஷெல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கும் (SDF) இடையே இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
-
- இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் இணைந்து இதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாட்டுப் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
- இது அமைதி காக்கும் பணிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) கடல் கொள்ளையர்களுக்கு எதிரான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- இந்தப் பயிற்சி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை (biennial) நடத்தப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு முதல் சீஷெல்ஸில் நடைபெற்று வருகிறது.
- கிரியோல் (Creole) மொழியில் “லாமிதியே” என்றால் “நட்பு” என்று பொருள்; இது இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவைச் சித்தரிக்கிறது.
- மேற்கு இந்தியப் பெருங்கடலில் சீஷெல்ஸின் முக்கிய அமைவிடம், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவிற்கு அது ஒரு முக்கியமான கூட்டாளியாக அமைகிறது.

