பாதுகாப்பு

‘அக்னி-5’ ஏவுகணை

  • 5,000 கி.மீ.தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
  • ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இந்தச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஏவுகணை சீனாவின் வடக்குப் பகுதி உள்பட ஒட்டுமொத்த ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறனுடையது.
  • கடந்த மாதம் 500 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 350 கி.மீ. தொலைவு வரையிலான இலக்கை தாக்கும் திறனுடைய ‘பிரித்வி- II, 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 700 முதல் 900 கி.மீ. வரையில் தாக்குமம் அக்னி-1’ மற்றும் 500 முதல் 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்துசென்று தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது.
Next Current Affairs பாதுகாப்பு >