தேசிய நிகழ்வுகள்

துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS)

  • சூழல்:  நாட்டின் கப்பல்கள் மற்றும் துறைமுக வசதிகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக, துறைமுகப் பாதுகாப்புப் பணியகத்தை (BoPS) அரசாங்கம் அமைக்கவுள்ளது.
  • இது சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்தின்(BCAS) மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது . 
  • சட்டப்பூர்வ நிலை: 2025 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அமைக்கப்பட உள்ளது.
  • நிர்வாகக் கட்டுப்பாடு: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • முக்கியப் பணிகள்:
  • கப்பல்கள் மற்றும் துறைமுக வசதிகளின் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைப் பணிகள்.
  • பாதுகாப்பு தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரிமாறிக்கொள்ளுதல்.
  • இணையப் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்.

மத்திய அரசின் இணையவழி வன உரிமைச் சேவைகள் திட்டம்

  • சூழல்: வன உரிமைகளை அங்கீகரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய முழு செயல்முறையையும் இணையவழியில் கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஒரு தேசிய இணையதளத்தை உருவாக்கி வருகிறது.
  • நோடல் அமைச்சகம்: பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்.
  • நோக்கம்: 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் வன உரிமைகளை அங்கீகரித்தல், நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைச் சீரமைத்தலாகும்.

மேம்பாட்டுத் தொடர்பு மற்றும் தகவல் பரவல் திட்டம் (DCID)

  • நோக்கம்: கிராமப்புற, பழங்குடியின, தொலைதூர மற்றும் நகர்ப்புற மக்களுக்குத் தகவல்களைப் பரப்புதல்.
  • நோடல் அமைச்சகம்: தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
  • முக்கிய முன்னெடுப்புகள்:  ஸ்வச் பாரத், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி போன்ற திட்டங்களைப் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்குப் தெரிவிக்கப்படுகின்றன.

பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய உச்சி மாநாடு

  • உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சி மாநாடு டிசம்பர் 17 அன்று புது டெல்லியில் தொடங்கியது.
  • பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
  • பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின்     உலகளாவிய மையம் ஜாம்நகரில் நிறுவப்பட்டுள்ளது.
  • உலக அளவில் ‘குணப்படுத்தும் கூட்டாண்மைகள்’ மீது இந்தியா கவனம் செலுத்துவதை பிரதமர் வலியுறுத்தினார்.
  • இரண்டு முக்கிய ஒத்துழைப்புகள்:
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் நாடுகளுக்கான ஒரு சிறப்பு மையத்தை நிறுவுதல்.
  • அறிவியல், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் ஆரோக்கியத்தை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஜப்பானுடனான ஒத்துழைப்பு.
  • உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டவை:
  • டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பங்கள்
  • செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள்
  • ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள்
  • நவீன ஆரோக்கிய உள்கட்டமைப்பு
Next Current Affairs தேசிய நிகழ்வுகள் >