தேசிய திட்டங்கள்

மருந்து தரப் பரிசோதனையை வலுப்படுத்த புதிய சட்டம்

  • மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் 2025 என்ற தலைப்பிலான இந்தச் சட்ட வரைவை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் 1947 என்ற சட்டத்துக்கு மாற்றாகவும்.சர்வதேச தரத்துக்கு இணையாகவும் இந்தப்புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதன பொருள்கள் சட்டம் 2025

  • இந்த சட்டம், 1940 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாற்றி, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 1940 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம்
    • Drugs and Cosmetics Act, 1940, மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையைக் கட்டுப்படுத்துகிறது.
    • இந்தச் சட்டம் இந்தியாவில் மருந்துத் துறையின் ஒழுங்குமுறைக்கு அடித்தளமாக உள்ளது, மேலும் இது தரக்கட்டுப்பாடு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
    • இது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 (Drugs and Cosmetics Act, 1940) என அழைக்கப்படுகிறது,மேலும் இது 1945 ஆம் ஆண்டில் விதிகளைக் கொண்டது.
    • மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தரத்தை உறுதி செய்தல், அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துவது இதன் நோக்கம் ஆகும்.
    • இந்தச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக, ஒழுங்குமுறைகளை அமல்படுத்துகிறது.
Next Current Affairs தேசிய திட்டங்கள் >