உஜ்வலா திட்டம் (Pradhan Mantri Ujjwala Yojana – PMUY)
- உஜ்வலா திட்டம் என்பது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான சமூக நலத்திட்டமாகும்.
- இத்திட்டம் 1 மே 2016 ல் தொடங்கப்பட்டது.
- இத்திட்டம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால்செயல்படுத்தபடுகிறது.
- மரவீடு, நிலக்கரி, கெரோசின் போன்ற ஆரோக்கியத்திற்கே ஆபத்தான எரிபொருட்களை மாற்றி,சுத்தமான LPG எரிவாயு இணைப்பை (connection) வழங்குவது.பெண்களின் ஆரோக்கியத்தையும், நேரச் சிக்கனத்தையும் மேம்படுத்துவது ஆகும்.
லக்பதி தீதி திட்டம்
- இத்திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இந்த முயற்சிபெண்களின் வருமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமல்லாமல், நிலையான வாழ்வாதார நடைமுறைகள் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதன் மூலமும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன்முலம் பெண்கள் தங்கள் சமூகங்களில் முன்மாதிரிகளாகச் செயல்பட்டு, பயனுள்ள வள மேலாண்மை மற்றும் தொழில்முனைவோரின் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
- இத்திட்டம் தேசிய கிராமிய வாழ்வாதார மிஷன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

