தேசிய திட்டங்கள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீண் (PMAY-G)

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீண் (PMAY-G) என்பது இந்திய அரசின் முதன்மையான கிராமப்புற வீட்டுவசதித் திட்டமாகும்.
இது 2022ஆம் ஆண்டுக்குள் “அனைவருக்கும் வீட்டுவசதி” வழங்கும் நோக்கத்துடன் ஏப்ரல் 1, 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம்,கூடுதலாக 2 கோடி வீடுகளை கட்டும் இலக்குடன் 2028-29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்வச்சு பாரத் மிஷன்-நகர்ப்புறம் 2.0 (SBM-U 2.0)

2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்வச்சு பாரத் மிஷன் நகர்ப்புற 2.0, 2025-2026ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சுமார் 2,400 பாரம்பரிய குப்பைக் கிடங்குகளை அகற்றும் இலக்கைக் கொண்டுள்ளது.

பாரம்பரிய கழிவு கிடங்குகள் என்பது பல ஆண்டுகளாக அறிவியல்பூர்வமற்ற மற்றும் கட்டுப்பாடற்ற முறையில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்பட்ட திட கழிவுகளைக் கொண்ட இடங்களாகும்.

ஸ்வச்சு பாரத் மிஷனின் “லக்ஷ்யா ஜீரோ டம்பிங் சைட்” முன்முயற்சி பழைய கழிவு தளங்களை அகற்றி “குப்பை இல்லாத நகரங்களை” உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Next Current Affairs தேசிய திட்டங்கள் >