முற்றிலும் சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் ஒடிஸா கிராமம்!
- ஒடிஸா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கந்தர்கார் மாவட்டத்தில் உள்ள தொலைதுார சிதாமமான சக சாஹி, தனது மின்சாரத் தேவைக்கு முழுவதுமாக சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் கிராமமாக மாறியுள்ளது.
ஒடிஸாவில் 142 இடங்களில் காட்டுத் தீ: நாட்டிலேயே மிக அதிகம்
- நாட்டில் அதிகபட்சமாக ஒடிஸா மாநிலத்தின் 142 இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்திய வன ஆய்வு நிறுவனம் (எஃப்எஸ்ஐ) வெளியிட்ட தகவலின்படி நாடு முழுவதிலும் உள்ள 391 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
- வனப் பகுதிகளில் மின்னல் தாக்குதல், வறண்ட மரங்கள் உரசிக்கொள்ளுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், பற்றவைக்கப்பட்ட சிகரெட், பீடி, போன்றவற்றை வறண்ட இலைகள் காணப்படும் பகுதியில் எறிதல் போன்ற மனிதத் தவறுகளாலும் காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுகின்றன.
- மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிமிலிபால் தேசிய பூங்கா உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.