தினசரி தேசிய நிகழ்வு

செல்வத்தின் மீதான பேராசையால் ஊழல் அதிகரிப்பு

  • செல்வத்தின் மீதான தீராத பேராசை ஊழல் நடவடிக்கைகளைப் புற்றுநோய் போல பெருக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது.
  • ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைத் தண்டிப்பதற்காகவே ஊழல் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டது. ஊழலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க அச்சட்டம் வழிவகுக்கிறது, எனினும், அச்சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை.

ஊழல் தடுப்புச்சட்டம் – 1988

  • ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டக்கட்டமைப்பு
  • திருத்தம் – 2018

முக்கிய அம்சங்கள்

  • லஞ்சம் வாங்கினால் 3-7 வருட சிறை அபராதம்
  • லஞ்சம் கொடுப்பவர்க்கு 7 ஆண்டுகள் சிறை அபராதம்

இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: குஜராத்தில் அமைகிறது

  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீகின் பல்கலைக்கழகம் குஜராத்தில் உள்ள கிஃப்ட் நகரத்தில் தனது கிளை வளாகத்தை முதல் முறையாக அமைக்கிறது.
Next தினசரி தேசிய நிகழ்வு >