தினசரி தேசிய நிகழ்வு

குடிநீர் பாட்டில்களுக்கு அஸ்ஸாம் தடை

  • அஸ்ஸாமில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • அஸ்ஸாம் தலைநகர் டிஸ்பூரில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 
  • பாலிஎத்திலின் டெரெஃபெலேட் மூலம் தயாரிக்கப்படும் ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • இதேபோல அடுத்த ஆண்டு அக்டோபர் முதல், மாநிலத்தில் 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படும்.
  • பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-இன்படி, ஒரே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கான தடையும் மாநிலத்தில் கடுமையாக அமல்படுத்தப்படும்
  • பாலிஎத்திலின் டெரெஃபெலேட் என்பது பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகைபாலியஸ்டராகும்.

அசாம் பற்றி

  • கவர்னர் – குலாப் சந்த் கட்டாரியா
  • முதல்வர் – ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா
  • தலைநகரம் – திஸ்பூர்
Next தினசரி தேசிய நிகழ்வு >