உலக உணவு இந்தியா நிகழ்வு
- உலக இந்தியா உணவு நான்காவது பதிப்பு செப்டம்பர் 25 முதல் 28, 2025 வரை புதுடெல்லியில் நடைபெறும்.
- ஏற்பாடு செய்யப்பட்டது: இந்திய அரசின் உணவு செயலாக்கத் தொழில் அமைச்சகத்தால்.
- நோக்கம்:
- உணவு செயலாக்கத் துறையின் வளர்ச்சிகளை வெளிப்படுத்துதல்.
- உலகின் ஒவ்வொரு வீட்டின் உணவு மேசையிலும் குறைந்தபட்சம் ஒரு இந்திய உணவுப் பொருள் சேர வேண்டும் என்ற தொலைநோக்குபார்வையை ஊக்குவித்தல்.
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு
- கர்நாடகத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது
- ஜாதிரீதியான பாகுபாட்டை களைவதுதான் ஜாதிவாரி கணக் கெடுப்பின் நோக்கம்.
- இந்த ஜாதிவாரி கணக்கெ டுப்பு செப்.22 முதல் அக்.7 வரை 15 நாள்களுக்கு நடத்தப் படும்..
- 2015-இல் காந்தராஜ் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏற்கெனவே 54 கேள்விகளுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இம்முறை மேலும் சில கேள்விகள் சேர்க்கப்படும்.

