தமிழ்நாடு

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த சிறப்புக்குழு அமைப்பு

  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (CMCHIS) நெறிமுறைப்படுத்த மாநில அரசு குழுவை அமைத்துள்ளது.
  • இக்குழுவிற்கு புதுதில்லி, தேசிய சுகாதார அமைப்பு வளமைய முன்னாள் நிர்வாக இயக்குனர் டி.சுந்தரராமன் தலைமை தாங்குகிறார்.

CMCHIS பற்றி

  • தொடங்கப்பட்டது –2009
  • இத்திட்டம் குறைந்த வருமானம், பின்தங்கிய குடும்பங்களுக்கு பெரிய அளவில் உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது.

குறிப்பு

  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) (2018 தொடங்கப்பட்டது) என்பது தேசிய அளவிலான சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.

தமிழ்நாட்டில் உற்பத்தி மேம்பாட்டு மையம் அமைக்க திட்டம்

  • தமிழ்நாடு அரசு உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து, சென்னையில் “இந்திய மேம்பட்ட உற்பத்தி மையம்” என்ற மையத்தை நிறுவுவதற்கான அரசு – தனியார் சந்திப்பை நடத்தியது.
  • நிறுவனங்களின் கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மற்றும் R&D முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகப் பொருளாதார மன்றம் (WEF) பற்றி

  • நிறுவப்பட்டது –1971 
  • தலைமையகம் – கொலோனி, சுவிட்சர்லாந்து
  • தலைவர் – போர்கே பிரெண்டே

நிறுவனர் – கிளாஸ் ஸ்வாப்

Next தமிழ்நாடு >