தமிழ்நாடு

ஆத்தூர் வெற்றிலை – புவிசார் குறியீடு

  • புவிசார் குறியீடுகள் பதிவகமானது, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீட்டினை வழங்கியுள்ளது.
  • இந்த வெற்றிலையானது தாமிரபரணி நதிநீரினால் வளமூட்டப்படுகிறது.
  • 13ஆம் நூற்றாண்டின் புத்தகமான “மார்கோபோலோவின் பயணங்கள்” என்ற புத்தகத்திலும் இந்த வெற்றிலைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.
  • அம்மாவட்ட நிர்வாகத்தினால் கயத்தாறு எலுமிச்சை, ஸ்ரீவைகுண்டம் வாழை, உடன்குடி கருப்பட்டி ஆகியவற்றின் புவிசார் குறியீடு அங்கீகாரத்திற்காகவும் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம்

  • முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர்கள் உள்ளிட்ட தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • மேயர்களுக்கு மாதம் 30,000 ரூபாயும், அதன் துணை மேயர்களுக்கு 15,000 ரூபாயும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
  • நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு 15,000 ரூபாயும், அதன் துணைத் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
  • ஒவ்வொரு மாதமும் அவர்களது பதவிக் காலம் முழுமைக்கும் என்ற வகையில் பேரூராட்சித் தலைவர்களுக்கு 10,000 ரூபாயும், அதன் துணைத் தலைவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
Next தமிழ்நாடு >