தமிழ்நாடு

‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’

  • ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை 1.3 சதவீதம் குறைந்துள்ளது.
  • ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தின் மூலம் கடந்த 15 மாதங்களில் தமிழகம் முழுவதும் சாலை விபத்தில் சிக்கிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

திட்டம் பற்றி:

  • தொடக்கம்   டிசம்பர் 18 ,2022 
  • நோக்கம்  விபத்து   நேர்ந்தவுடன் விபத்துக்குள்ளானவர்க்கு   முதல்

48 மணி  நேரத்துக்கு தமிழ்நாட்டின் அரசு சார்பில் ஒரு லட்சம் வரை செலவிடப்பட்டு அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுதல்.

  • இத்திட்டத்திற்காக தமிழ் நாட்டில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறும் 500 இடங்களை சுற்றியுள்ள 235 அரசு மருத்துவ மனைகள், 448 தனியார் மருத்துவ மனைகள் என, 683 மருத்துவமனைகள் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழக கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்கப்பட்டது

  • தமிழ்நாடு கைதிறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் 243 கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருது வழங்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 05 கைவினைஞர்கள் தினமாக அறிவித்துள்ளது.
Next தமிழ்நாடு >