மருத்துவப் பரிசோதனைகளின் தர நிர்ணய ஆய்வகம்
- பொது சுகாதாரத் துறை ஆய்வகங்களையும், அங்கு மேற் கொள்ளப்படும் பரிசோதனைகளையும் தர நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக ஆய்கவத்தை மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
- தமிழக மருத்துவத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து ஆய்வகங்களுக் கும் தர நிர்ணய பரிசோதனைகளை மேற் கொள்ளும் வகையில் தர நிர்ணய ஆய்வ கம் உருவாக்கப்பட்டுள்ளது.
- முதல்கட்டமாக, செங்கல்பட்டு, திரு வள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களை தர நிர்ணயம் செய்து சர்வதேச தர சான் றிதழ் பெறப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- இந்த ஆய்வகம், பிற மாநிலங்களில் இயங்கும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங் களுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் தர பரிசோதனையை மேற்கொள்ளும்.
-
- இது தவிர, தன்னார்வ நிறுவனங்களுடன் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் தொற்று நோய்களை முன்பே கண்டறிவதற்கான நடவடிக்கைகள், கழிவுநீரில் உள்ள நுண் கிருமிகளை ஆய்வுசெய்து நோய் பரவலை முன் கூட்டியே அறிதல், டெங்கு, மலேரியா, சிக்குன் குளியா தடுப்பு நடவடிக்கை களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும் டான் சாம் அமைப்புடன் செயற்கை நுண்ண றிவு மூலமாக நீரில் குளோரின் அளவைக் கண்டறிந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது தொடர்பான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6-9 வகுப்பு மாணவர்களுக்கு ‘டிஎன் ஸ்பார்க்’ புதிய திட்டம்
- வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கு (Tamil Nadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற பெயரில் மாணவர்களுக்கு கணினி சார்ந்த அடிப்படை அறிவியளையும், செயற்கை நுண் ணறிவுத் திறனையும், அதைப் பயன்படுத் தும் தொழில்நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- இந்தத் திட்டத்தின் மூலம் அடிப்படை கணினி அறிவியல் கல்வி சார்ந்த இணையதள கருவிகள், கோடிங், ஏஐ ஆகிய நான்கு கருப்பொருள்களை அடிப்படை யாகக் கொண்டு பாடத் திட்டம் உருவாக் கப்பட்டு, பாடநூல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- விழாவில் ‘திறன் (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட் டுள்ள புத்தகங்களையும், டிஎன் ஸ்பார்க் பாடத் திட்ட நூல்களையும் துணை முதல் வர் வெளியிட்டார்.
கேலோ இந்தியா மையங்கள்
- தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 38 கேலோ இந்தியா மையங்கள் உள்ளன.
- KICs என்பது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான விளையாட்டு பயிற்சி மையங்கள் ஆகும்.
இவை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி மற்றும் பயிற்றுவிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

