தமிழ்நாடு நிகழ்வுகள்

அறிக்கைகள்/கணக்கேடுபுகள்

கரோனாவுக்கு பிந்தைய தமிழக சுகாதார முன்னேற்றம்

  • சூழல்: கரோனா தொற்றுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வலுப்பெற்றதுடன், தாய்-சேய் ஆரோக்கியக் குறியீடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு குழு மற்றும் ஆய்வுக் காலம்

  • சென்னை ஐஐடி சார்பில் கரோனாவுக்கு பிந்தைய தமிழகத்தின் சுகாதாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி தலைமையில், பெங்களூருவை சேர்ந்த மூடிஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் இணை ஆய்வாளர் உன்னிட்டோர் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஆய்வின் முக்கிய கண்டறிதல்கள்

  • இதில், 2017 முதல் 2024 வரை 108 ஆம்புலன்ஸ் சேவையின் எட்டு ஆண்டு கால தரவுகள் ஆராயப்பட்டது. ஆய்வின் முடிவுகளின் படி, பெருந்தொற்று கால இடர்பாடுகளுக்குப்பின்னர், தமிழகத்தின் சுகாதார அமைப்பு விரைவாக மீண்டு வந்துள்ளதும், அதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தாய்-சேய் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்

  • மேலும், தாய் இறப்பு விகிதம் 19 சதவீதம் குறைந்துள்ளதுடன், வீட்டில் பிரசவங்கள் நடைபெறுவது 36 சதவீதத்துக்கும் மேலாக சரிந்துள்ளது. கருச்சிதைவுகள் 28 சதவீதம், பிறந்த குழந்தை இறப்பு 17 சதவீதம் குழந்தை இறப்பு 19 சதவீதம் குறைந்துள்ளது. தாய் சேய் ஆரோக்கியக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னேற்றத்திற்கான முக்கிய காரணங்கள்

  • அவசர கால மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்கம், சுகாதாரப் பணியாளர்கள் அதிகரிப்பு, தாய் சேய் நலத் திட்டங்களில் சிறப்பு சுவனம் உள்ளிட்டவை இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

Next தமிழ்நாடு நிகழ்வுகள் >