சுற்றுசூழல்
சீமைக்கருவேல மரம்
- பின்னணி : சீமைக் கருவேல மரங்களை அகற்ற தாக்கலான பொதுநல வழக்கில்,அம்மரங்களை அகற்றும் பணியை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், வி.பாரதிதாசன் கொண்ட சிறப்புக் குழுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைத்துள்ளது.
சீமைக்கருவேல மரம் (Prosopis Juliflora)
- சீமைக்கருவேல மரம் என்பது நீர் ஆதாரங்கள், மண் வளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும், மிக வேகமாக வளரக்கூடிய ஒரு ஆக்கிரமிப்புத் தாவரமாகும்.
- இது பேபேசி (Fabaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர் அல்லது சிறிய வகை மரமாகும் (மெஸ்கைட் வகை).
- இது மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைத் தாயகமாகக் கொண்டது.
- வறண்ட மற்றும் அரை வறண்ட நிலப்பகுதிகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புத் தாவரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
நடப்பு தகவல்கள்
- பகுதி III, சரத்து 32 – இப்பகுதியால் வழங்கப்பட்ட உரிமைகளைச் செயல்படுத்துவதற்கான அரசியலமைப்புச் சட்டத் தீர்வுகள்.
- பகுதி VI, சரத்து 226 – குறிப்பிட்ட நீதிப்பேராணைகளை (Writs) பிறப்பிக்கும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரம்

