தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சிகள் /திட்டங்கள் 

கலைஞர் கனவு இல்லம்  திட்டம்

  • பின்னணி : முதல்வர் அவர்கள்  2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகளும் நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் 

    • “நலமுடன் தமிழ்நாடு 2030′ திட்டத்தில் அனைவருக்கும் போதிய மருத்துவ காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
  • பேறுகால இறப்புகளை குறைப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
    • வேளாண் துறையில் நிகர சாகுபடி பரப்பை 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும் 43 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • இயற்கை விவசாயம் 17,000 ஹெக்டேராகவும் உயிர் வேளாண்மை ஒரு லட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும்.
    • நீர் சேமிப்பை மேம்படுத்த நுண்ணீர்ப்பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட்டு மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
    • உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • “வெற்றிப் பள்ளிகள் திட்டம்” மூலம் 1,000 மாதிரிப் பள்ளிகள் விரிவுபடுத்தப்படும். 
    • அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு 2030க்குள் உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கல்வி துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஏஐ ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • வீட்டுமனை இல்லாத ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினக் குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
  • கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் “உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
  • 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு  மாநில தகவல் ஆணையர்கள்

  • பின்னணி : தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு இரு புதிய மாநில தகவல் ஆணையர்களை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (மத்திய சட்டம் 22/2005) பிரிவு 15 -இன் துணைப் பிரிவு (3) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி. ஆளுநர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமார் சிங் ஆகியோரை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தகவல் ஆணையர்களாக நியமித்துள்ளார்.

மாநில தகவல் ஆணையம் (SIC) 

  • இது  தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) 2005 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். 
  • மாநில தகவல் ஆணையத்தில்  ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும்  அதிகபட்சம் 10 மாநில தகவல் ஆணையர்கள் உள்ளனர். 
  • முதலமைச்சர் (தலைவர்), சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் ஒரு அமைச்சரவை அமைச்சர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கிறார். 
  • இவர்களது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை. 
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >