முன்முயற்சி / திட்டம்
பிங்க் க்ரூ (Pink Crew)
- மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) ”பிங்க் க்ரூ” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில், ஒரு குறிப்பிட்ட பாதையில் இயங்கும் பேருந்துகளின் செயல்பாடுகள் முழுமையாக பெண்கள் மட்டுமே கொண்ட குழுவால் நடத்தப்படும்.
- வியாசர்பாடி பணிமனையிலிருந்து இயக்கப்படும் மின்சார பேருந்துகள் செல்லும் இரண்டு வழித்தடங்களில் இந்த ‘பிங்க் க்ரூ’ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பங்கேற்பையும் தலைமைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் ‘நான் முதல்வன்’ தொழில்நுட்பப் படிப்புகள்
- தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளின் 4வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- நோக்கம்: நான் முதல்வன் முயற்சியின் கீழ் தொழில்நுட்ப பாடங்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல் மற்றும் பாலிடெக்னிக் கல்வியை தொழில்துறை சார்ந்த திறன்களுடன் இணைத்தல்.
- நடப்பு கல்வியாண்டு 2025–26 – இல் இருந்து செயல்படுத்தப்படுகிறது.
- தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) இந்தப் படிப்புகளை அறிமுகப்படுத்துவதை மேற்பார்வையிடுகிறது.
- பயனுள்ள கற்பித்தலை உறுதி செய்வதற்காக, பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு 6 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளை உள்ளடக்கிய பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
விருதுகள்
முத்தமிழ் பேரவை விருதுகள்
- தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் பேரவை விருதுகளை வழங்கினார்.
| கலைஞர் விருது | நடிகர் எம். நாசர் |
| ராஜரத்னா விருது | வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி |
| இயல்செல்வம் விருது | திருவாரூர் புலவர் ஆர். சண்முகவடிவேலன் |
| இசைச் செல்வம் விருது | காயத்திரி வேங்கடராகவன் |
| நாட்டியச் செல்வம் விருது | அனிதா குஹா |
| நாகஸ்வரம் செல்வம் விருது | டி.கே.ஆர். ஐயப்பன் & டி.கே.ஆர். மீனாட்சிசுந்தரம் |
| தவில்செல்வம் விருது | நாங்கூர் என்.கே. செல்வகணபதி |
| மிருதங்கச் செல்வம் விருது | தஞ்சாவூர் கே. முருகபூபதி |

