ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா
- இவர் 1857 அக்டோபர் 4 அன்று மாண்டவியில் பிறந்தார்.
- இவர் இந்தியப் புரட்சியாளர், வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர்ஆவார்.
- புரட்சிகர தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்திய தன்னாட்சி சங்கம் (Indian Home Rule Society) 1905 ஆம் ஆண்டு லண்டனில் ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவால் நிறுவப்பட்டது.
- ஜூலை 1905 லண்டனில் ‘இந்தியா ஹவுஸ்’ (India House) அமைப்பை நிறுவி, ‘தி இந்தியன் சோஷியாலஜிஸ்ட்’ (The Indian Sociologist) என்ற இதழைத் தொடங்கினார்.
- இது பிரிட்டனில் இந்திய தேசியவாத செயல்பாடுகளின் மையமாகத் திகழ்ந்தது.
- பம்பாய் ஆரிய சமாஜத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு (வீர சாவர்க்கர்) ஊக்கமளித்தவர்களில் ஒருவராக இருந்தார்.
- முதலாம் உலகப் போரின் போது பாரிஸிற்கும், பின்னர் ஜெனீவாவிற்கும் குடிபெயர்ந்தார். மார்ச் 30, 1930 இல் அவர் காலமாகும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
- இவரது நினைவாக ‘கிராந்தி தீர்த்’ (Kranti Teerth) என்ற நினைவகம் 2010 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.

