சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா பிரேஸில் இடையிலான இருதரப்பு வர்த்தகம்

  • பின்னணி : இந்தியா பிரேஸில் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் களாக ரூ.1.81 லட்சம் கோடி அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது..
  • தற்போதைய (2024–25) இருதரப்பு வர்த்தக மதிப்பு 12 பில்லியன் டாலர் ஏற்றுமதியில்  6.77 பில்லியன், இறக்குமதியில் 5.47 பில்லியன்.
  • அரிய கனிமங்கள் கொள்முதல் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
  • உருக்கு, வர்த்தகம், சிறு-குறு-நடுத்தர தொழில், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
  • பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், முதலீடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி தெரிவித்தன.
  • எண்ம பொது உள்கட்டமைப்பு மையத்தை பிரேஸிலில் அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. ஏ.ஐ., சூப்பர் கம்ப்யூட்டர், செமிகண்டக்டர் துறைகளுக்கு முன்னுரிமை.
  • ஹைட்ரோகார்பன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எத்தனால் கலப்பு துறைகளில் ஒத்துழைப்பு விரைவுபடுத்தப்பட்டது.
பாதுகாப்பு
Next சர்வதேச நிகழ்வு >