இந்திய விவசாய சாதனைகள்
- பால், பருப்பு வகைகள் மற்றும் சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- அரிசி, கோதுமை, பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
- மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாகவும் இந்தியா உள்ளது.
- கடந்த ஆண்டு, இந்தியா அதன் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தியைப் பதிவு செய்தது.
- எண்மப் பரிமாற்றம்
- நாடு முழுவதும் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 54% பேர் எண்மப் பரிமாற்றத்தை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.
- 2014-இல் மத்திய அரசால் மானியங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற ‘ஜன்தன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அடித்தட்டு மக்களுக்காக குறைந்தபட்ச வைப்பு இல்லாத சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
- அதிலிருந்துதான் தொடங்கியது இந்தியாவின் எண்மப் பரிமாற்றப் புரட்சி.

