இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI)
பீகாரில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தத்தின் போது, தேர்தல் ஆணையம் (EC) 1987க்குப் பிறகு பிறந்தவர்களின் பெற்றோரின் பெயர்கள் ஏற்கனவே 2003 வாக்காளர் பட்டியலில் இருந்தால் அவர்களுடைய பிறப்புச் சான்றைக் காட்ட வேண்டியதில்லை என்று அறிவித்தது
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பற்றி
இந்தியத் தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324இன் கீழ் நிறுவப்பட்ட நிரந்தர மற்றும் சுதந்திரமான அரசியலமைப்பு அதிகாரம் ஆகும்.
ECI பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் இந்தியாவின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களை நடத்தும் பொறுப்பினை வகிக்கிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர் முதன்மைத் தேர்தல் ஆணையாளர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையாளர்களை நியமிக்கிறார். அவர்கள் ஆறு வருடங்களுக்கு மிகாமல் அல்லது 65 வயது வரை, எது முன்னதோ அதுவரை பணியாற்றுகிறார்கள்.
இந்தியாவின் முதன்மைத் தேர்தல் ஆணையாளர் – ஞானேஷ் குமார்
தமிழ்நாட்டின் முதன்மை தேர்தல் அதிகாரி – திருமதி அர்ச்சனா பட்நாயக் (முதல் பெண் முதன்மை தேர்தல் அதிகாரி)
புதிய குற்றவியல் சட்டங்கள்
தமிழ்நாட்டில் புதிய குற்றவியல் சட்டங்கள் பழைய காலனித்துவ கால சட்டங்களை மாற்றிய ஒரு வருடத்திற்குப் பிறகு, மாநில அரசு பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களின் முதல் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது மற்றும் இப்போது மேலும் இத்தகைய மாற்றங்கள் கொண்ட பட்டியலை தயாரித்து வருகிறது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பாரதீய நியாய சம்ஹிதா (BNS), பாரதீய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS), மற்றும் பாரதீய சாக்ஷ்ய அதினியம் (BSA) ஆகியவை காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சி சட்டத்தை மாற்றி ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்தன

