வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படவில்லை – உச்சநீதிமன்றம்
- பின்னணி : உச்சநீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சக சுற்றறிக்கையின் படி வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் அல்ல என்று தீர்ப்பு வழங்கியது.
- சுற்றறிக்கை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் பாடலுக்கு வழிகாட்டுதலாக மட்டுமே உள்ளது.
- சுற்றறிக்கையில் பாடப்படாததற்கு எந்தவொரு தண்டனை விதிப்பும் குறிப்பிடப்படவில்லை.
வந்தே மாதரம் பற்றி
- ஜனவரி 24, 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சபையால் வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடலாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-
- இது முதலில் பங்கதர்ஷனில் 1875 வெளியிடப்பட்டு, பின்னர் 1882-ல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நாவலில் இணைக்கப்பட்டது.
- 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக பாடி அறிமுகப்படுத்தினார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேசியப் பாடலை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், சரத்து 51A(a) தேசிய சின்னங்களை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
- 1907-ஆம் ஆண்டில், பிகாஜி காமா அவர்கள் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக பெர்லினில் உள்ள ஸ்டட்கார்ட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்தக் கொடியில் ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- பின்னணி : ஏப்ரல் மாதத்தில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி (TMC) தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது.
- காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 2018-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகிய இரு அமைப்புகள் செயல்படுகின்றன.
- நதி நீர் விவகாரங்கள் இந்திய அரசியலமைப்பின் சரத்து 262-ன் கீழ் வருகின்றன.
காவிரி நதி நீர் தீர்ப்பாயம்
- மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956-ன் கீழ், 1990-ஆம் ஆண்டு இந்தத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
- கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசால் இது உருவாக்கப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் சிக்கல்கள் சட்டம் 1956-ன் பிரிவு 6A வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய அரசு 2018-ஆம் ஆண்டில் ‘காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை’ அறிவித்தது.
- இதன் மூலம் ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ (CWMA) மற்றும் ‘காவிரி நீர் முறைப்படுத்தும் குழு’ (CWRC) ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் திருத்திய உத்தரவையும் செயல்படுத்துகிறது
- காவிரி நீரின் சேமிப்பு, பங்கீடு, ஒழுங்குபடுத்தல் மற்றும் கட்டுப்பாட்டை உறுதிசெய்கிறது
- கர்நாடகா மாநிலம் பிலிகுண்டுலு எல்லைப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் நீரை வெளியிடுவதை உறுதிசெய்கிறது.
காவேரி ஆறு பற்றி
- காவேரி ஆறு, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவேரியில் உருவாகி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக சுமார் 800 கி.மீ. தூரம் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
காவிரி ஆற்றின் துணையாறுகள்
- இடது கரை துணையாறுகள்: ஹாரங்கி, ஹேமாவதி, ஷிம்ஷா, அர்க்காவதி
- வலது கரை துணையாறுகள்: லட்சுமண தீர்த்தா, கபினி, சுவர்ணவதி, பவானி, நொய்யல், அமராவதி .

