மாநிலங்களவை விதி 267 இன் வரம்புகள்
- சூழல்: மாநிலங்களவைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன், டிசம்பர் 05, 2025 அன்று விதி 267 இன் வரம்புகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
- மாநிலங்களவை விதி 267 இன் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம்.
- இந்த விதியின் கீழ் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களவையின் அன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.
- இருப்பினும், இந்த விதியைச் செயல்படுத்த மாநிலங்களவைத் தலைவரின் ஒப்புதல் அவசியமாகும்.
மாநிலங்களவை விதி 267 பற்றி
- இது 2000 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
- அதன்படி, மாநிலங்களவையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட விவகாரங்களை மட்டுமே விதி 267 இன் கீழ் விவாதிக்க முடியும்.
- வேறு எந்த விவகாரங்களையும் விவாதிக்க முடியாது.
- இந்த விதியின் கீழ் 1988 ஆம் ஆண்டுக்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடையில் 3 அறிவிப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- இதுவரையில் ஒருமனதாக 8 வழக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

