இந்திய அரசியல்

தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் வெளியீடு

  • எண்ம (டிஜிட்டல்) தனிநபர் தரவு பாதுகாப் புச் சட்ட விதிமுறைகள் 2025-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • தங்கள் தரவுகளை குடிமக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும். அந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் அந்த விதிமுறைகள் வழிவகை செய்கின்றன.
  • இந்த விதிமுறைகள் 12 முதல் 18 மாத காலத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக அமலுக்கு வரும்.
  • 2023-ஆம் ஆண்டின் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் விதமாக அந்தச் சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
  • இந்த விதிமுறைகளின்படி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் எதற்காக இரட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக விளக்கி, அதற்கு சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து எளிமையான முறையில் ஒப்புதல் பெறுவதற் கான நோட்டீஸை தரவு நிர்வாக பொறுப்பாளர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள், கருள், வினையாட்டு செயலி நிறு வனங்கள் போன்றவை) வெளியிட வேண்டும்.
  • அந்தப் புகார்கள் மீதான நடவடிக்கை எந்தக் கட்டத்தில் உளது என்பதை பின்தொடர உதவும் வகையிலும் முழுமையான எண்ம நிறுவனமாக தரவு பாதுகாப்பு வாரியம் செயல்படும். 
  • இந்த விதிமுறைகள் மூலம்கள் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை எந்த நேரத்திலும்ரத்து செய்யும் அதிகாரம்.தனி நபர்களுக்குக் கிடைக்கும். 
  • விளம்பரம் அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும்அழைப்புகளை பொதுமக்கள் தவிர்க்கவும் எந்தவொரு என்ம வழியிலும் அவர்களின் தனிநபர் தரவு, காணொலி மற்றும் குரல் பதிவை அனுமதியின்றி பெறுவதை தடுக்கவும் இந்த விதிமுறைகள்  வழிவகுக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
Next Current Affairs இந்திய அரசியல் >