இந்திய அரசியல்

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர்

  • துணை குடியரசுத் தலைவர் – இந்தியாவில் இரண்டாவது உயர்ந்த அரசியலமைப்புப் பதவியாகும்
  • துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் குடியரசுத் தலைவர்  மற்றும் துணை குடியரசுத் தலைவர்  தேர்தல் சட்டம், 1952 மற்றும் குடியரசுத் தலைவர்  மற்றும் துணை குடியரசுத் தலைவர்  தேர்தல் விதிகள், 1974 ஆல் நிர்வகிக்கப்படுகிறது.
  • துணை குடியரசுத் தலைவர்  ஒரு தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார், இதில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் உட்பட மக்களவை  மற்றும் மாநிலங்களவை  உறுப்பினர்கள் உள்ளனர்.
  • வேட்புமனு குறைந்தபட்சம் 20 தேர்வாளர்களால் முன்மொழிபவர்களாகவும், குறைந்தபட்சம் 20 தேர்வாளர்களால் ஆதரவாளர்களாகவும் கையெழுத்திடப்பட வேண்டும்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

  • அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்​பூர் மாநிலத்​தில் 2025, பிப்​ர​வரி 13-ல் பிரகடனம் செய்​யப்​பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்​சியை மேலும் 6 மாதங்​கள் தொடர்ந்து நீட்​டிப்​பதற்​கான ஒப்புதலை அவை வழங்​கி​யுள்​ளது.
    • இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதியி​லிருந்து அமலுக்கு வரும்.
    • ஒரு மாநிலத்​தில் அமல்​படுத்​தப்​படும் குடியரசுத் தலை​வர் ஆட்சி வழக்​க​மாக 6 மாதங்​கள் வரை நீடிக்கும்.
    • ஆனாலும் இதனை, நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதலுடன் ஒவ்​வொறு ஆறு மாத காலத்​துக்​கும் 3 ஆண்​டு​கள் வரை நீடிக்​க முடி​யும்​.

    கல்வி நிலையங்களில் மாணவர் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

    • இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்டத்தை அரசு இயற்றும் வரையில் இந்த நெறிமுறைகள் அமலில் இருக்கும்.
    • அனைத்துக் கல்வி நிறுவனங்களும் சீரான மனறல பாதுகாப்பு திட்டத்தையும், தேசிய தற்கொலைகள் தடுப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
    • 100 அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள் கொண்ட கல்வி நிலையங்கள் திறன்வாய்ந்த ஆலோசகர்அல்லது உளவியலாளர் அல்லது சமூக ஆர்வலரை நியமித்து இளம் மாணவர்களின் மனநல பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
Next Current Affairs இந்திய அரசியல் >