அறிவியல்

விண்வெளி

நிசார் – நாசா மற்றும் இஸ்ரோவின் முதல் கூட்டு செயற்கைக்கோள்

  • நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) நாசா மற்றும் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட முதல் கூட்டு செயற்கைக்கோள் ஆகும்.
  • ஜூலை 30 அன்று ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • GSLV-F16 ராக்கெட் இந்த செயற்கையான திறப்பு ரேடார் செயற்கைக்கோளை 743 கிமீ சூரிய-ஒத்திசைத்து செலுத்தும்.
  • 2,392 கிலோ எடையுள்ள நிசார் செயற்கைக்கோள் ஒரு தனித்துவமான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
  • இரட்டை அதிர்வெண் நாசாவின்( L-அலைவரிசை மற்றும் இஸ்ரோவின் S-அலைவரிசை ) செயற்கையான திறப்பு ரேடாரால் புவியை கண்காணிக்கும் முதல் செயற்கைக்கோள் இதுவாகும்
  • நிசார் முதன்முறையாக ஸ்வீப்SAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 242 கிமீ அகலம் மற்றும் உயர் இடஞ்சார் தெளிவுத்திறனுடன் புவியை கண்காணிக்கும்.
  • நிசார் புவியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட (நில உருமாற்றம், பனிப்படல நகர்வு மற்றும் தாவர இயக்கவியல் போன்ற ) கண்டறிய முடியும்.
  • நிசாரின் பயன்பாடுகளில் கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கடற்கரை கண்காணிப்பு, புயல் வகைப்படுத்தல், மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களின் வரைபடமாக்கல் மற்றும் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மறுமொழி ஆகியவை அடங்கும்.
Next Current Affairs அறிவியல் >