அறிவியல்

விண்வெளி

இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACE)

  • சூழல் : IN-SPACe அமைப்பின் ஆதரவுடன், குஜராத் (கொராஜ் – Koraj) மற்றும் தமிழ்நாடு (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் பொது தொழில்நுட்ப வசதிகளை  நிறுவுவதற்கு விண்வெளித் துறை (DoS) ஒப்புதல் அளித்துள்ளது.

IN-SPACe பற்றி 

    • இது விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற ஒருங்கிணைப்பு முகமையாகும்.
    •  இதன் தலைமையகம் அகமதாபாத், குஜராத்தில் அமைந்துள்ளது. 
    • இந்த அமைப்பிற்குப் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் தலைமை தாங்குவார்.
  •  இந்த அமைப்பு ஜூன் 2022 முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது.

முக்கியப் பணிகள்

  • தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளின் (NGEs) அனைத்து விண்வெளி சார்ந்த செயல்பாடுகளுக்கும் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குதல்.
  • தொழில்துறைக்கு உகந்த விதிமுறைகள் மூலம் தனியார் விண்வெளித் துறையை ஊக்குவித்தல், வழிநடத்துதல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுதல்.
  • ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களுக்கான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளை உருவாக்குதல்.

IN-SPACe அமைப்பின் சமீபத்திய முடிவுகள் 

  • 2024 ஆம் ஆண்டில் ‘அக்னிபாண் சார்டெட்’ ஏவுகணை ஏவுதலுக்கான அனுமதியை வழங்கியது.
  •  2022 ஆம் ஆண்டில் ‘விக்ரம்-எஸ்’ ஏவுகணை ஏவுதலுக்கான அனுமதியை வழங்கியது.
  • தரவுப் பகிர்வைக் கட்டுப்படுத்தும் புவி கண்காணிப்புக் கொள்கையை 2023 இல் வெளியிட்டது.
  • இந்திய விண்வெளிச் செயல்பாடுகளுக்கான நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை வெளியிட்டது.
Next அறிவியல் >