நிதி சுகாதாரக் குறியீடு’ (Fiscal Health Index – FHI)
-
- இந்திய மாநிலங்களின் நிதிச் செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக, நிதி ஆயோக் (NITI Aayog) தனது ‘நிதி சுகாதாரக் குறியீட்டின்’ (Fiscal Health Index – FHI) இரண்டாம் பதிப்பை 2026-ல் வெளியிட்டுள்ளது.
- இந்தக் குறியீடு, மாநிலங்களின் நிதி நிலைத்தன்மையை மதிப்பீடு செய்யவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், தரவுகளின் அடிப்படையில் நிதி சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதை ஆதரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும்.
- இந்தியாவின் ஒட்டுமொத்த அரசு கடனில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுகளுடையது.
-
- முதல் பதிப்பில் 18 முக்கிய மாநிலங்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டன.
- புதிய பதிப்பில் வடகிழக்கு மற்றும் இமயமலைப் பிராந்தியத்தைச் சேர்ந்த 10 மாநிலங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
- நிதி சுகாதாரக் குறியீடு (Fiscal Health Index) 2026-ன் ‘முன்னணி பிரிவில்’ (Front Runner category) குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

