அரசியல்

அரசு நலத்திட்டங்கள்

ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் – தொடக்கம்.

  • ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அங்கன்வாடியில் தொடங்கப்பட்டது.
  • 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில், ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
  • கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 60 கிராம் என்ற அளவில் ஆண்டுக்கு 300 நாள்களுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் இடமாற்றத்தின் போது அங்கன்வாடி சேவைகளை அணுக போஷன் செயலி உதவுகிறது

  • ஒரே நாடு, ஒரே அங்கன்வாடி திட்டத்தில் 57,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட மொத்த பயனாளிகள் – 10.6 கோடி
  • அதில் 47.6 லட்சம் பாலூட்டும் தாய்மார்கள், 7.48 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மீதமுள்ள குழந்தைகள்.

போஷன் அபியான் பற்றி

  • திட்டம் 2018 இல் தொடங்கப்பட்டது.
  • பருவப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை வலியுறுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
Next அரசியல் >