விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சிறந்த செயல்பாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது

  • பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் திரு-வி-க நகர் மற்றும் அடையாற் மண்டலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிப்பதற்கும் சேவை வழங்கலில் போட்டி உணர்வை வளர்ப்பதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது

காவல் துறையில் பணியாற்றியதற்கு 21 பேருக்கு பதக்கம்

  • காவல் துறையில் அளப்பரிய பணியாற்றியதற்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி பி. பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் ஜி. கார்த்திகேயன், எஸ். லட்சுமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேபோல, சிறப்புப்பணி பதக்கத்துக்கு எஸ்.பிக்கள் ஏ. ஜெயலட்சுமி, எஸ். விமலா உள்ளிட்ட 21 பேர் தேர்வானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முப்படை-ஆயுதக் காவல் படையினர் 167 பேருக்கு வீரதீர விருதுகள்

  • நாடு முழுவதும் காவல் துறை யினர், தீயணைப்புப் படையினர், ஊர்க்காவல் படையினர், குடிமைப் பாதுகாப்புப் படையினர், சீர்திருத்தப் பணி பிரிவினருக்கு மொத்தம் 1,090 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில் 32 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆபரேஷன் சிந்தூர்: 18 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரதீர விருது
  • கீர்த்தி சக்ரா-4 மற்றும் வீர சக்ரா-15
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றி வருபவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது

     

    ‘டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் விருது’

    • அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஏபிஜெ அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது
    • இஸ்ரோ தலைவர் வ.நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது
    • வி.நாராயணன் -இஸ்ரோ வில் 41 ஆண்டுகளாக பல முக்கிய தலைமைப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி இப்போது அதன் தலைவராக உயர்ந்துள்ள வி.நாராயணனுக்கு அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஏபிஜெ அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

     

    கல்பனா சாவ்லா விருது – துளசிமதி முருகேசன்

    • துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
    • இடது கைதசைநார் சிதைவு குறைபாடு இருந்தபோதும் உடல் சவால்களை தடையாகக் கருதாமல் இறகுப் பந்தாட்டத்தில் சாதனை படைத்து வரும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

     

    நல்லாளுமை விருதுகள்

    • தனித்துவமான யோசனைகள், முன்னெடுப்புகள் மூலமாக, அரசுத் துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வரின் நல்லாளுமை விருது வழங்கப்படுகிறது.
    • சமுதாய பங்கேற்பு மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகளுக்காக
    • திருநெல்வேலி மாவட்டத்தின் உதவி காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்னகுமார், வட்டாட்சியர் பாளலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.யமுனா ஆகியோரைக் கொண்ட குழுவுக்கும்
    • அரசுத்துறைகள்
    • ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின நலத்துறை
    • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
      • நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – கன்னியாகுமரி கடல் முனையில் கண்ணாடிப் பாலத்தை ஏற்படுத்தியதற்காக
      • தமிழ் இணையக் கல்விக்கழகம்
      • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகச் சேவையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் :
      • திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் குமரவேல் சண்முகசுந்தரம்,
      • சேலம் மாவட்டம் எக்காம்வெல் நிறுவனம்,
      • கோவை மாவட்டத் தின் குணசேகரன் ஜெகதீசன்,
      • விருதுநகர் மாவட்டத்தின் பெல் பிரிண்டர்ஸ் நிறுவனம்,
      • காஞ்சி புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
      • மகளிர் நலனுக்காக சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கும் அரசின் விருதுகள்:
      • சென்னை மாவட்ட சமூக சேவர் பாகீரதி ராமமூர்த்தி,
      • விருதுநகர் மாவட்டத்தின் சு.மாரி முத்து,
      • சென்னை மாவட்டத்தின் சுருணாலய சமூக சேவை நிறுவனம்,
      • திருச்சி மாவட்டத்தின் சொசைட்டி ஃபார் எஜுகேசன் வில்லேஜ் ஆக்சன் நிறுவனம்

       

      மாநில இளைஞர் விருது

      • மாநிலத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மூன்று இளம்வயது ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஆண்டு தோறும் முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
      • பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்
      • கேரம் வீராங்கனை காஜிமா
      • விழுப்புரம் மாவட்டம் சந்துருகுமார்
      • திருநெல்வேலி மாவட்டம் மு.ஜெயக்குமார்
      • புதுக்கோட்டை மாவட்டம் அ.லாவண்யா
      • கிருஷ்ணகிரி மாவட்டம் கு.கௌரி
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >