விருதுகள் மற்றும் கௌரவங்கள்

UNEP-இன் புவிக்கான சாதனையாளர்கள் விருது 2025

  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறைக்கான கூடுதல் தலைமைச் செயலாளர், சுப்ரியா சாஹு (தமிழ்நாடு), UNEP-இன் புவிக்கான சாதனையாளர்கள் விருது 2025 ஐ வென்றுள்ளார்.
  • புவிக்கான சாதனையாளர்கள் விருதுஎன்பது ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கவுரவமாகும்.
  • இந்த விருதை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ஆண்டுதோறும் வழங்குகிறது.
  • திருமதி. சாஹு, “உத்வேகம் மற்றும் செயல்” எனும் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பிரிவு, மக்களுக்கும் கிரகத்திற்கும் அளவிடக்கூடிய நன்மைகளை வழங்கும் தலைவர்களை அங்கீகரிக்கிறது.

தேசிய கைவினைப் பொருட்கள் விருதுகள் 2023 மற்றும் 2024

  • மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சில்ப் குரு விருதுகள் (உயர்ந்த கவுரவம்) மற்றும் தேசிய விருதுகளை புது டெல்லியில் வழங்கினார்.

விருது பெற்றவர்கள்

  • சில்ப் குரு விருது 2023
  • அஜித்குமார் தாஸ் ( மேற்கு வங்கம்) – கையால் வரையப்பட்ட துணிகள்
  • டி சிவம்மா (ஆந்திரப் பிரதேசம்) – தோல் பொம்மைகள்
  • தேசிய விருது 2023
  • ஹிராபாய் ஜரேகா பாகெல் (சத்தீஸ்கர்) – உலோக கைவினை
  • இம்தியாஸ் அஹமத்  (உத்தரப் பிரதேசம்) – கையால் செய்யப்பட்ட கம்பளம்
  • ரோஷன் சிப்பா (ராஜஸ்தான்) – கலைத் துணிகள்
  • சில்ப் குரு விருது 2024
  • சுபாஷ் அரோரா (ஹரியானா) -உலோக கைவினை
  • முகமது தில்ஷாத் (உத்தரப் பிரதேசம்) – மரச் செதுக்குதல்
  • தேசிய விருது 2024
  • டி பாஸ்கரன் (தமிழ்நாடு) – கற் செதுக்குதல்
  • ரூபான் சித்ரகார் (மேற்கு வங்கம்) – ஓவியம்
  • பல்டேவ் பாக்மாரே (மத்தியப் பிரதேசம்) – பழங்குடியின கைவினைஞர்கள் பிரிவு
  • மொத்த விருதுகள்
  • சில்ப் குரு விருதுகள்: மொத்தம் 12 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது (2023 மற்றும் 2024 இரண்டிற்கும் சேர்த்து).
  • தேசிய விருதுகள்: மொத்தம் 36 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது (இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து).

 

Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >