தேசிய தண்ணீர் விருதுகள்:
- இவ்விருதை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
- தென் மண்டலத்தில் சிறந்த மாவட்டத்துக்கான விருது திருநெல்வேலிக்கு கிடைத்துள்ளது.
நோக்கம்
- “நீர்வளம் நிறைந்த இந்தியா’ என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் நற்பணி மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, தேசிய தண்ணீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
- தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தண்ணீர் பயன்பாட்டில் சிறந்த வழிகளைப் பின்பற்ற ஊக்குவித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.
- சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த தண்ணீர் பயனர் சங்கம் என மொத்தம் 10 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
| சிறந்த மாநிலம் |
|
|
|
|
|
| சிறந்த மாவட்டம் | தென் மண்டலத்தில் திருநெல்வேலி முதலிடம் |
| சிறந்த நீர் பயனர் சங்கம் | கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன் புதூர் கால்வாய் உடையக்குளம் கிராம நீர் பயனர் சங்கம் |
| சிறந்த கிராம ஊராட்சி |
|
|
|
| சிறந்த தொழில் நிறுவனம் | காஞ்சிபுரத்தில் உள்ள அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம்- 1 ம் இடம் |
நீர் பாதுகாப்புத் திட்டங்கள்:
- தெலங்கானா முதலிடம், கோயம்புத்தூர் இரண்டாமிடம்
- மத்திய அரசின் ‘நீர் சேகரிப்பில் மக்களின் பங்கேற்பு முன்னெடுப்பின் கீழ், 5 மண்டலங்களாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
- குறைந்தபட்சம் 10,000 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
- மேற்கூரை மழைநீர் சேகரிப்பு போன்ற செயற்கையான நிலத்தடி நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, புனரமைத்து, பராமரிக்க விருதாளர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது.
நீர் பாதுகாப்பு திட்டங்களில்
- தெலங்கானா முதலிடம் பிடித்துள்ளது.
- சத்தீஸ்கர் இரண்டாவது இடத்தையும்,
- ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
தென்மண்டலத்தில்
- கோயம்புத்தூர்2-ஆவது இடத்தையும்,
- நாமக்கல் 10-ஆவது இடத்தையும்,
- ராமநாதபுரம் 13-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
- நவ.18-ஆம் தேதி தேசிய தண்ணீர் விருதுகளுடன் சேர்த்து இந்த விருதுகளையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார்.
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது:
- கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆக்ஸ்போர்டில் ஒளிரும் பெரியார் ஈ.வெ.ரா. ஓவியத்தைத் தந்த தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

