உலக அமைப்புகள் – ஒப்பந்தங்கள் மற்றும் உச்சிமாநாடுகள்
SCO உச்சி மாநாடு 2025
25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு * ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 1, 2025 தியான்ஜின், சீனா
Meijiang மாநாட்டு & கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.
இது SCO வரலாற்றிலேயே மிகப்பெரிய கூடுகையாக இருந்தது.
சீனாவின் 5வது முறை SCO உச்சி மாநாட்டை நடத்தும் நிகழ்வாகும்.
“Tianjin Declaration” ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முக்கிய கவனம்: பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பலதுருவ உலக ஒழுங்கு.
SCO Development Bank (SCO அபிவிருத்தி வங்கி) உருவாக்க உறுதி எடுக்கப்பட்டது. SCO பற்றி (முக்கிய தகவல்கள்)
தொடக்கம் (Formation):
15 ஜூன் 2001 – ஷாங்காய், சீனாவில் நிறுவப்பட்டது.
மூலம் (Origh):
Shanghal Five (1996) → சீனா, ரஷ்யா, கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான். ஆரம்ப உறுப்பினர்கள் (2001);
சீனா, ரஷ்யா, கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்வகிஸ்தான்.
புதிய உறுப்பினர்கள்:
இந்தியா & பாகிஸ்தான் → 2017ல் சேர்ந்தது. ஈரான் 2023ல் முழு உறுப்பினரானது. பெலாரஸ் → 2024ல் முழு உறுப்பினரானது.
கண்காணிப்பு நாடுகள் (Observer States); ஆப்கானிஸ்தான், மங்கோலியா.
உரையாடல் கூட்டாளிகள் (Dlalogue Partners);
துருக்கி, அஜர்பைஜான், இலங்கை, நேபாளம், கம்போடியா, சவுதி அரேபியா, கட்டார், எகிப்து, UAE போன்றவை.
தலைமைக்கழகம் (HQ):
பீஜிங், சீனா.
அதிகாரப்பூர்வ மொழிகள்:
ரஷ்யன் & சீன மொழி
தற்போதைய பொதுச்செயலாளர் (2025):
✓ Zhang Ming (8cm).
பிரைட் ஸ்டார் 2025 பயிற்சி
எகிப்தில் நடைபெறும் பிரைட் ஸ்டார் 2025 பயிற்சியின் 19வது பதிப்பில் இந்திய ஆயுதப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பலதரப்பு இராணுவப் பயிற்சியாகும், இது மத்திய கிழக்கு-வட ஆப்பிரிக்கா (MENA) பிராந்தியத்தில் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலமாக நடைபெறும் முப்படைப் பயிற்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1980 முதல் அமெரிக்காவுடன் இணைந்து எகிப்தால் நடத்தப்படும் இது, இருதரப்பு அமெரிக்க-எகிப்து முயற்சியிலிருந்து முழு அளவிலான பலதரப்பு இராணுவப் பயிற்சியாக பரிணமித்துள்ளது.
குறிக்கோள்: பங்கேற்கும் நாடுகளிடையே கூட்டுத்தன்மை மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துதல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கூட்டுப் பயிற்சி மூலம் பலதரப்பு போர் தயார்நிலையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், கூட்டு நடவடிக்கைகளுக்கான தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் பிந்தைய கட்டளை-போஸ்ட் பயிற்சிகள், களப் பயிற்சி மற்றும் மூத்த தலைவர் கருத்தரங்குகளில் பயிற்சியை நடத்துதல்
செமி-கான் இந்தியா-2025
செமிகண்டக்டர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், புத்தாக்க தொழில்முனைவோர் என 50 நாடுகளைச் சேர்ந்த 2,500 பிரதிநிதிகள், பல்வேறுமாநில மாணவர்கள் என 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள செமி-கான் இந்தியா-2025 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்ள
முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் ‘சிப்’
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் செமிகான் இந்தியா-2025 சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவால் வழங்கப்பட்டது.
இந்த சிப் “விக்ரம்-32 (அதிகாரபூர்வமாக ‘விக்ரம்3201) என அழைக்கப்படுகிறது. இது ஏவுகணையின் அனைத்து கடுமையான சுற்றுச்சூழல் நிலைகளிலும் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் முழு உள்நாட்டு சிப் ஆகும்.
32-பிட் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிப், அதிக அளவிலான தரவுகளைத் திறமையாக கையாளும் விண்வெளித் துறை மட்டுமன்றி பாதுகாப்பு, ஆட்டோமொபைல், எரிசக்தித் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றும்

