முக்கிய தினங்கள்

உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

  • உலக அறிவுசார் சொத்துரிமை தினம், படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • இது, உலகளாவிய அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையான ‘உலக அறிவுசார் சொத்து அமைப்பு’  மூலம் வழிநடத்தப்படுகிறது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 2026-ன் கருப்பொருள் : “அறிவுசார் சொத்துரிமை மற்றும் விளையாட்டு: தயார், தொடங்கு, புத்தாக்கம் செய்” (IP and Sports: Ready, Set, Innovate).
  • 2026-ன் இந்த கருப்பொருள், விளையாட்டுத் துறையில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றலை இயக்குவதில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கினை மையமாகக் கொண்டுள்ளது.

நடப்பு தகவல்கள்

  • கட்சித் தாவல் தடைச் சட்டம்
    • இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) கட்சி மாறுவதால் ஏற்படும் தகுதி நீக்கம் குறித்து விளக்குகிறது.
    • பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்
      • அவர் தனது அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை விருப்பத்துடன் துறக்கும்போது.
      • கட்சியின் கட்டளைக்கு (whip) எதிராக வாக்களிக்கும்போதோ அல்லது வாக்களிக்காமல் புறக்கணிக்கும்போதோ (முன் அனுமதி இன்றி).
      • தேர்தலுக்குப் பிறகு சுயேச்சை உறுப்பினர் ஏதேனும் அரசியல் கட்சியில் சேரும்போது.
      • நியமன உறுப்பினர், பதவியேற்று 6 மாதங்களுக்குப் பிறகு ஏதேனும் அரசியல் கட்சியில் சேரும்போது.
    • விலக்குகள்
      •  குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைய உடன்பட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
      • நடுநிலைமையை பேணுவதற்காக சபாநாயகர் அல்லது தலைவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யலாம், பின் மீண்டும் சேர்ந்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்.
    • முக்கிய அம்சங்கள்
      • தகுதி நீக்கம் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அவையின் சபாநாயகர் அல்லது தலைவரிடம் உள்ளது.
      • கிஹோடோ ஹோலோஹான் 1992  வழக்கின்படி, சபாநாயகரின் இந்த முடிவானது நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்பட்டது.
    • 91-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் (2003)
      • கட்சிப் பிளவு ( மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்) குறித்த பிரிவை நீக்கியது.
      • அமைச்சரவையின் எண்ணிக்கையை அவையின் மொத்த பலத்தில் 15% ஆகக் குறைத்தது.
      • தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வரை எந்தவொரு அமைச்சர் பதவியையோ அல்லது ஊதியம் பெறும் அரசியல் பதவியையோ வகிக்க முடியாது.
  • காற்றாலை மின் உற்பத்தி
    • நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் 6 ஜிகாவாட் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • காற்றாலை மின் உற்பத்தித் திறனில், இந்தியா உலக அளவில் 4-ஆவது இடத்தில் உள்ளது. 
    • தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், இத்துறையில் முன்னோடியாகத் திகழ்கின்றன. குஜராத்தின் கட்ச், பதான், பனாஸ்கந்தா போன்ற பகுதிகளில் இப்போது மாபெரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்கள் உருவாகி வருகின்றன. 
< Previous Current Affairs Next முக்கிய தினங்கள >

People also Read