முக்கிய தினங்கள்

மாநிலங்களவை தினம் 

  • மாநிலங்களவை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 
  • இத்தினம் , 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி மாநிலங்கள் அவையின் (council of states)  முதல் அரசியலமைப்பைக் குறிக்கிறது.
  • பின்னர் மாநிலங்களவை (Rajya sabha ) எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • இதன் முதல் அமர்வு 1952 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி நடைபெற்றது

மாநிலங்களவை பற்றி 

    • மாநிலங்களவை ‘மாநிலங்கள் அவை’ (Council of States) என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
    • இதன் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆகும். இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 238 உறுப்பினர்களும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்களும் அடங்குவர். தற்போது இதன் எண்ணிக்கை 245 (233+ 12) ஆக உள்ளது.
    • உறுப்பினர்கள் மாநிலச் சட்டப்பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால், விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை மாற்று வாக்கு முறை மூலம் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • இது ஒரு நிலையான அவை . இது கலைக்கப்படுவதில்லை. இதில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகிறார்கள். உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
  • தகுதிகள் மற்றும் தகுதியிழப்பு
    • உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது 30 ஆண்டுகள்.
    • ஆதாயம் தரும் பதவி வகித்தல், மனநலம் குன்றியிருத்தல், கடன் தீர்க்க இயலாத நிலை, வெளிநாட்டு குடியுரிமை பெறுதல் மற்றும் பத்தாவது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் நடவடிக்கை போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் தகுதியிழப்பு செய்யப்படலாம்.
      நடப்பு தகவல்கள்

      • மிஷன் கர்மயோகி

      2020 செப்டம்பர் 2 அன்று மத்திய அமைச்சரவையால் தொடங்கப்பட்ட மிஷன் கர்மயோகி (NPCSCB – National Programme for Civil Services Capacity Building) என்பது, iGOT கர்மயோகி டிஜிட்டல் தளத்தின் மூலம் குடிமைப் பணியாளர்களின் திறனை மேம்படுத்தி, ஆட்சியை விதி அடிப்படையிலிருந்து பங்கு அடிப்படையிலான அமைப்பாக மாற்றும் ஒரு தேசிய சீர்திருத்தத் திட்டமாகும்.


< Previous Current Affairs Next முக்கிய தினங்கள >