புவியியல்

சுற்றுச்சூழல்

ஆலிவ் ரிட்லி ஆமை பாதுகாப்பு 

  • பின்னணி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு மேலாண்மை ஆணையம் மற்றும் கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்தின் அதிகாரிகள், ஹோப் தீவில் கிட்டத்தட்ட 20,000 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளனர்.

கோரிங்கா வனவிலங்கு சரணாலயம்

  • இது ஆந்திரப் பிரதேசத்தில் கோதாவரி ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ளது.
  • இச்சரணாலயம் 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளைக்  கொண்டுள்ளது.

ஆலிவ் ரிட்லி ஆமைகள்

  • ஆலிவ் ரிட்லி ஆமைகள், அரிபாடா எனப்படும் தங்களின் பெருங்கூட்டமாக முட்டையிடும் நடத்தைக்காக அறியப்படுகின்றன.
  • ஆலிவ் ரிட்லி ஆமையானது சர்வதேச யூசிஎன் (IUCN) அமைப்பால் ‘பாதிக்கப்படக்கூடிய இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Next புவியியல் >