பாதுகாப்பு

சங்கமித்திரை

  • பின்னணி: அடுத்த தலைமுறை கடலோர ரோந்துக் கப்பலான (NGOPV) சங்கமித்ராவை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியக் கடற்படை உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் சங்கமித்ராவின் பெயரால் இந்தக் கப்பல் பெயரிடப்பட்டுள்ளது.
  • கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தில் இந்தக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  •  சங்கமித்ரா, 11 அடுத்த தலைமுறை கடலோர ரோந்துக் கப்பல்களில் ஒன்றாகும்.

தற்சார்பு இந்தியாவுக்கான ஆதரவு

  • பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, இந்தத் தொடக்கம், பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைவதற்கான உந்துதலை வலுப்படுத்துகிறது.
  • இது, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சி மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது.
Next பாதுகாப்பு >