ரஃபேல் போர் விமானம்
- பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தயாரிப்பான ரஃ பேல் விமானம் இந்திய விமானப் படையில் கடந்த 2020, செப்டம்பரில் முறைப்படி இணைக்கப்பட்டது.
- தற்போது 36 விமானங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் 114 விமானங்களைக் கொள்முதல் செய்ய விமானப்படை தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
- அதேநேரம், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க் கப்பலில் பயன்படுத்துவதற்காக 26 ரஃபேல் போர் விமானங்களை ரூ.64,000 கோடிக்கு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இந்தியாவும் பிரான்ஸும் கடந்த ஏப்ரலில் இறுதி செய்தன.
- அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் உள்ள விமானப் படை நிலையத்தில் கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சுகோய்-30 போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் முர்மு பறந்துள்ளார்.
- இதற்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் (2006), பிரதீபா பாட்டீல் (2009) ஆகியோர் சுகோய் 30 போர் விமானத்தில் பறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

