தேசிய நிகழ்வுகள்

நிதி ஆயாக் நிர்வாக குழு கூட்டம்.

  • தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் (கொள்கை வகுக்கும் குழு) அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி.
  • “வளர்ந்த பாரதம் 2047:  இந்தியர்களின் பங்களிப்பு” என்ற கருத்துருவில் நீதி ஆயோக்கின் 8-வது நிர்வாகக் குழு கூட்டம், 2023 மே 23 நடைபெற்றது.
  • நிதி ஆயோக் என்பது நாட்டின் மிக உயரிய கொள்கை உத்திகளை வகுக்கும் அமைப்பாகும். பிரதமர் தலைமையிலான இதன் நிர்வாகக் குழுவின் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சாதனை

  • “அமிருத சரோவர்” திட்டத்தின் கீழ் 50,000-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

குறிப்பு

  • நிதி ஆயோக் நிறுவப்பட்டது – 1 ஜனவரி, 2015.
  • நிதி ஆயோக்கிற்கு முன்பு, 1950 மார்ச் 15 அன்று அமைக்கப்பட்ட திட்டக்குழு செயல்பட்டது.

முதல் டிஜிட்டல் சென்சஸ்

  • மே 22 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையரின் அலுவலகமான ஜங்கனனா பவனைத் திறந்து வைத்தார்.
  • “மொபைல் செயலி” மூலம் முதல் டிஜிட்டல் சென்சஸ்.
  • பொது மக்கள் தங்களைப் பற்றிய சுய விவரங்களை, நேரடியாக அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு

  • 1881 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
Next தேசிய நிகழ்வுகள் >