”மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
- மாதத்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ”மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
- நடப்பு ஜுன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி அமெரிக்கவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன் காரணமாக ஒரு வாரம் முன்னதாகவே மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
காசநோய் இல்லா இந்தியா:
- 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- காசநோயாளிகளைத் தத்தெடுக்கும் ”நிக்ஷய் மித்ரா” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான காசநோயாளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காசநோய் (TB) பற்றி
- காசநோய் (TB) மைகோபாக்டீரியம் டுபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
- பாக்டீரியா பொதுவாக நுரையீரலைத் தாக்கும்.
- கூடவே சிறுநீரகம், முதுகெலும்பு மற்றும் மூளை போன்ற உடலின் எந்தப் பகுதியையும் தாக்கும்.
குறிப்பு:
- உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி 2020 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மிகப்பெரிய காசநோய் தொற்றுநோயைக் கொண்டுள்ளது.
- இது உலகெங்கிலும் உள்ள காசநோய் தொற்று பதிவுகளில் 26% ஆகும்.
புதிய வெண்மைப் புரட்சி:
- பாரமுல்லா பகுதியில் வேளாண்மை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அங்கு பாலுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது. அங்கு வாழும் மக்கள் அந்தத் சவாலை வாய்ப்பாக மாற்றிக் காட்டியுள்ளனர்.
- அங்கு வாழும் பலர் கால் நடை வளர்ப்பை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன் காரணமாக, புதிய வெண்மைப் புரட்சியின் மையமாக பாரமுல்லா மாறி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அங்கு 500-க்கும் அதிகமான பால் உற்பத்தி மையங்கள் தொடங்கப் பட்டுள்ளன.

